வானொலி தொடர்பாடல் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தேசிய மற்றும் சர்வதேச எல்லைகளில் வானொலி அலைக்கற்றை அதிக நெரிசல் நிலைமையை எதிர்கொள்கின்றது. ஒரு பட்டையில் அதிகமான வானொலி நிலையங்களை இயக்கும் போது தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக பாதகமான இடையூறுகளுக்கு காரணமாக அமைகின்றது.
விமானம் மற்றும் கடல் வழித் தொலைத்தொடர்புகள் போன்று வான் மற்றும் சர்வதே கடல் மார்க்கத்தில் நீண்ட தூர வானொலி தொடர்பாடல்கள் விடயத்தில் அலைக்கற்றையின் முகாமைத்துவமானது குறுகிய தூர தேசிய நிலத்தடி தொடர்பாடல் சேவைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிக்கலான மற்றும் உணர்திறன் வாய்ந்த பணியாகும். எனவே, தேசிய எல்லைகளுக்குள் அலைக்கற்றைப் பயன்பாட்டின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்திசைவு மிகவும் முக்கியமானதாகும்.
உலகளாவிய அடிப்படையில் அலைக்கற்றைப் பயன்பாட்டின் ஒழுங்குபடுத்தல் என்பது சர்வதேச தொலைத்தொடர்பாடல் சங்கத்தின் (ITU) வானொலி தொடர்பாடல் துறையின் மிகவும் முக்கியமான பொறுப்பாகும். அனைத்து தொலைத்தொடர்பாடல் சேவைகளும் வானொலி அதிர்வெண் அலைக்கற்றையை வினைத்திறனுடன், சமத்துவமாகவும், நியாயமாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவது வானொலித் தொடர்பாடல் துறையின் பணியாகும். இங்கு செய்மதிச் சுற்றுப்பாதைகளின் பயன்பாடு, வானொலித் தொடர்பாடல் விடயங்கள் தொடர்பாக ஆய்வுகளை நடாத்துதல் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தல் என்பனவும் உள்ளடங்கும்.
சர்வதே தொலைத்தொடர்பாடல் சங்கம் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை சர்வதேச வானொலி தொடர்பாடல் மாநாடுகளை நடாத்துகின்றது. சர்வதே வானொலி தொடர்பாடல் என்பது வானொலி அலைக்கற்றையை ஒழுங்குபடுத்தும் அதியுயர் சர்வதேச அமைப்பாகும். இந்த மாநாட்டின் தீர்மானங்கள் பல்வேறு வகையான வானொலி சேவைகளுக்கான அதிர்வெண் ஒதுக்கீட்டினை குறிப்பீடு செய்யும் சர்வதேச வானொலி ஒழுங்குபடுத்தல்களை நிறுவுவதுடன் அவ்வாறு நிறுவுவதற்கான நிபந்தனைகளையும் வரையறுக்கின்றது. வானொலி ஒழுங்குபடுத்தல்கள் சர்வதேச தொலைத்தொடர்பாடல் சங்க உடன்படிக்கை அந்தஸ்தினைக் கொண்டுள்ள ITU சமவாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. வானொலி ஒழுங்குபடுத்தல்கள் காலத்திற்குக் காலம் சர்வதேச வானொலி தொடர்பாடல் மாநாட்டினால் திருத்தப்படுகின்றன.
இலங்கை உள்ளடங்கலாக சர்வதே தொலைத்தொடர்பாடல் சங்கத்தின் அங்கத்துவ நாடுகளின் தேசிய அதிர்வெண் ஒதுக்கீட்டு அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ள அலைக்கற்றைப் பட்டைகளின் ஒதுக்கீடுகள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறுகின்ற சர்வதே தொலைத்தொடர்பாடல் சங்கத்தின் வானொலி ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் 5 ஆம் உறுப்புரையின் சர்வதே அதிர்வெண் ஒதுக்கீடுகள் மூலமாகவே ஒதுக்கப்படுகின்றன.
இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள ஒரு நிறுவனம் என்ற வகையில் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவானது எமது தேசிய அக்கறைகள் போதியளவு பாதுகாக்கப்படுகின்ற நாட்டின் வானொலி தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் சட்டங்களுடன் சர்தேச கொள்கைகள் இணக்கமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக சர்வதே தொலைத்தொடர்பாடல் சங்கத்தின் வானொலி தொடர்பாடல் துறையின் பணிகளில் (ITU-R) செயலார்வமிக்க வகிபாகத்தை செவ்வனே நிறைவேற்றுகின்றது.
சர்வதேச கூட்டொத்துழைப்பின் குறிக்கோள்கள் மற்றும் கடப்பாடுகள் :