இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை தாக்கலிடுதல்

படிமுறை 2

இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தின் 09 ஆம் உறுப்புரையின் கீழ் தாக்கலிட்டுள்ள ஒரு முறைப்பாடு தொடர்பில் புலனாய்வு செய்யும் அதிகாரம் இலங்கை தொலைதொடர்பாடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு சாட்டப்பட்டுள்ளது.

  1. உங்கள் முறைப்பாடு தொடர்பில் சேவை வழங்குநர் விரைவாக செயற்படாதவிடத்து அல்லது நீங்கள் திருப்திப்படும் விதத்தில் பிரச்சனைக்கு தீர்வுகாண முற்படாதவிடத்து ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம்.
  2. அத்தகைய ஒவ்வொரு முறைப்பாடும் எழுத்து மூலம் இருக்க வேண்டுமென்பதுடன், அவ்வாறு முறைப்பாடு செய்வதற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
  3. குறித்த முறைப்பாடு தொடர்பான புலனாய்வின் போது, குறித்த பிரச்சனைக்கு ஏதுவான காரணத்தை அல்லது முறைப்பாட்டுக்கு வழிகோலிய விடயத்தை சீராக்குவதற்கு தேவைப்படுமென கருதும் படிமுறைகளை எடுக்குமாறு ஆணைக்குழு உரிய சேவை வழங்குநருக்கு பணிப்புரை வழங்குவதுடன், பொருத்தமானதென என கருதும் பட்சத்தில் இழப்பீடுகளை வழங்குமாறும் பணிப்புரை வழங்கும்.
  4. முறைப்பாட்டின் இயல்பினை கருத்திற்கொள்ளாது, ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் அனைத்து முறைப்பாடு தொடர்பாகவும் ஆணைக்குழு எழுத்துமூலமான பதில்களை வழங்கும்.
  5. ஒரு முறைப்பாடானது சட்டத்தின் 09 ஆம் உறுப்புரையின் பிரமாணங்களுக்கு இயைபாக இருப்பதாயின், குறித்த முறைப்பாட்டினைக் கருத்திற்கொள்ளுமாறும் பிரச்சனையை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் TRCSL குறித்த சேவை வழங்குநரைக் கேட்டுக்கொள்ளும்.
  6. குறித்த முறைப்பாடு தொடர்பாக சேவை வழங்குநருக்கு அறிவிப்பதற்கு ஆணைக்குழுவினால் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாட்டாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும்.
  7. குறித்த பிரச்சனையை சீராக்குவதற்கு சேவை வழங்குநரால் எடுத்துள்ள ஏற்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு தகவல்கள் கிடைத்ததும், மேலும் இச்செயல்திட்டம் ஒழுங்குபடுத்தலுடன் இயைபாக இருந்தால் மற்றும் ஆணைக்குழுவின் விதிமுறைகளுடன் இணங்கியொழுகுவதாக இருந்தால் அது தொடர்பாக முறைப்பாட்டாளருக்கு முறையாக அறிவிக்கப்படும்.
  8. இயக்குநரால் மேற்கொள்ளப்பட்ட பரிகாரம் அல்லது நிவாரணம் அல்லது செயல்திட்டம் விதிமுறைகளுடன் இணங்கியொழுகாதவிடத்து அது தொடர்பாக முறைப்பாட்டாளருக்கு எந்த தகவல்களும் வழங்கப்படாது என்பதுடன், ஆணைக்குழு உங்கள் சார்பாக சேவை வழங்குநருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும்.
  9. சேவை வழங்குநரால் வழங்கப்பட்ட நிவாரணம் தொடர்பில் முறைப்பாட்டாளர் திருப்திப்படாதவிடத்து, அவர் திருப்திப்படும் விதத்திலான சாத்தியமான மாற்றுத் தீர்வுகள் குறித்து அவருடன் கலந்துரையாடப்படும். அதன் பின்னரும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இருப்பின் குறித்த விடயம் வாடிக்கையாளர் முறைப்பாடுகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள உள்ளகக் குழுவிற்கு பாரப்படுத்தப்படும்.
  10. வாடிக்கையாளரின் முறைப்பாடுகளை புலனாய்வு செய்வதற்காக ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள உள்ளகக் குழு இரு தரப்பினரின் விடயங்களை விசாரித்து பிரச்சனையை எளிதாக தீர்ப்பதற்கான வசதிப்படுத்தல் பணியை மேற்கொள்ளும் அல்லது ஆணைக்குழுவினால் நியாயமானதொரு தீர்மானத்தை எடுக்கும் விதத்தில் பயனுறுதிவாய்ந்த நடவடிக்கைகள் அடங்கிய பரிந்துரைகளை வழங்கும்.