இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு




ஒற்றை சாளர கருத்து (Single Window Concept) குறித்த பங்குதாரர்கள் (Stakeholders) கூட்டம் .....

11 11 2025 - 15:30 PM

"கிராமத்துக்கு தொலைத்தொடர்புகள் "செயற்திட்டம் (GSP) அனுமதி செயல்முறையை விரைவுபடுத்த ஒற்றை சாளர கருத்து (Single Window Concept) குறித்த பங்குதாரர்கள் (Stakeholders) கூட்டம்

2025 நவம்பர் 10  இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL), கொழும்பு

"கிராமத்துக்கு தொலைத்தொடர்புகள்" செயற்திட்டத்தின் (GSP) கீழ் அனுமதி செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான “ஒற்றை சாளரக் கருத்தாக்கத்தினூடாக முன்னோக்கிச் செல்லும் பாதை” குறித்த பங்குதாரர் கூட்டம் நவம்பர் 10, 2025 அன்று இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் (TRCSL) நடைபெற்றது.

GSP என்பது நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தவும், சேவை பெறாத மற்றும் குறைவாக சேவை பெறும் பிரதேசங்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகளை விரிவுபடுத்தவும் நோக்கமுடைய ஒரு தேசிய முயற்சியாகும். இதன் மூலம் நாடு முழுவதும் முழுமையான 4G இணைப்பு வழங்கி, அனைவருக்கும் சமமான டிஜிட்டல் அணுகலை உறுதி செய்வது இலக்காகும்.

இக்கூட்டத்தினை டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மாண்புமிகு பிரதி அமைச்சரும் பொறியியலாளருமான எரங்க வீரரத்தன தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயற்பாட்டுச் செயலாளர் திரு. வருண ஸ்ரீ தனபால, பொது பணிப்பாளர் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, ஆகியோரும் மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பெருந்தோட்டத்துறை அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை, முதலீட்டு சபை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு, இலங்கை மின்சார சபை, தொல்பொருள் திணைக்களம், நில சீர்திருத்த ஆணைக்குழு, பௌத்த விவகாரத் திணைக்களம், நில அளவைத் திணைக்களம், வனத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, நில ஆணையர் நாயகத்தின் திணைக்களம், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட பல அரச அமைப்புகளின் மூத்த அதிகாரிகள்/பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர். மேலும் செல்லுலார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகளும் அழைப்பின் பேரில் பங்கேற்றனர். 

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பொது பணிப்பாளர்,  ஓய்வு பெற்ற ஏர் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் அவர்களின் வரவேற்பு உரையுடன் அமர்வு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மாண்புமிகு பிரதி அமைச்சரும் பொறியியலாளருமான எரங்க வீரரத்தன தொடக்க உரை ஆற்றினார். டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயற்பாட்டுச் செயலாளர் திரு. வருண ஸ்ரீ தனபால அரசின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நோக்கம் குறித்து உரையாற்றினார். 

தேசிய டிஜிட்டல் இலக்குகளை அடைவதில் GSP இன் மூலோபாய பங்கை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் இன் சிறப்புத் திட்டங்கள் இயக்குநர் திரு. நிஷாந்த பலிஹவதனா விரிவாகக் கூறினார். பின்னர் டயலொக் அக்சியாடா நிறுவனத்தின் (Dialog Axiata PLC) குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு. சுப்புன் வீரசிங்க, தற்போதைய அனுமதி செயல்முறையில் உள்ள முக்கிய சவால்கள் மற்றும் ஒற்றை சாளர கருத்தின் (Single Window Concept) மூலம் அவற்றை எவ்வாறு விரைவுபடுத்தலாம் என்பதற்கான பரிந்துரைகள் குறித்து உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற திறந்த கலந்துரையாடலில், பங்கேற்ற அனைத்து துறைகளின் பிரதிநிதிகளும் அனுமதி செயல்முறைகளை எளிமைப்படுத்தவும், இலங்கையின் டிஜிட்டல் உருமாற்ற முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும் GSPன் விரைவான செயல்படுத்தலுக்காக இணைந்து செயல்படுவதற்கான வழிகளை ஆராய்ந்தனர்.
 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்