தொலைத்தொடர்பு வசதிகளை மீள்கட்டமைப்புச் செய்வதற்கான செயன்முறையை துரிதப்படுத்துவதற்கான “புயலினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் தொலைத்தொடர்பு வசதிகளின் மீட்டெடுப்பு தொடர்பான கூட்டம்” என்ற தலைப்பிலான அக்கறை காட்டுநரின் கூட்டமொன்று இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் (SLTRC) 2025 நவம்பர் 28 ஆம் திகதி நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு கௌரவ (பொறியியலாளர்) எரங்க வீரரத்ன, டிஜிடல் பொருளாதார அமைச்சர் தலைமை தாங்கியதுடன், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பதவியணியினர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய பதவியணியர் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர். கையடக் தொலைபேசி செயற்படுத்துநர்கள் மற்றும் பிரதான நிறைவேற்று அலுவலர்கள் மற்றும் சிரேட்ட பிரதிநிதிகள் அழைப்பின் பேரில் பங்குற்றினர்.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் மார்சல் பந்துல ஹேரத் (ஓய்வுபெற்ற), அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து கௌரவ (பொறியியலாளர்) எரங்க வீரரத்ன, டிஜிடல் பொருளாதார அமைச்சர் ஆரம்ப குறிப்புக்களை முன்வைத்தார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், திரு. துசிதா வைத்தியரத்ன, தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனர்த்த மீள்கட்டமைப்பு செயன்முறையின் முக்கியமான சவால்களை சுட்டிக் காட்டியதுடன் முகவராண்மைகளின் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களின் தேவைகளை வலியுறுத்திக் கூறினார்.
இன்றுவரை நடைபெற்றுவரும் செயற்பாடுகள் குறித்து கையடக்க தொலைபேசி செயற்படுத்துனர்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அதன் பொறுப்புக்களை நிறைவு செய்யும் பொருட்டு அதன் ஒத்துழைப்பு தொடர்பான அர்ப்பணிப்பு தொடர்பில் அவர்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வெளிப்படுத்தினர்.
பிபில, பஸ்சர, பல்லேகலே, நுவரஎலிய மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்களில் தொலைத்தொடர்பு தடைகளுக்கு வழிவகுத்த பைபர் வலையமைப்பு உட்கட்டமைப்பு பாதிக்கப்பட்டமைக்கு பஸ்சர, கடுகண்ணாவ மற்றும் வெலிமடை போன்ற இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டமையே காரணம் என அவர்கள் அறிக்கையிட்டனர்.
கண்டி, பதுளை, வெலிமடை, பஸ்சர, நுவரஎலிய, அம்பாறை, மாத்தளை, அநுராதபுரம், பொலொன்னறுவை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் கையடக்க தொலைபேசிச் சேவைகள் கனிசமாக பாதிக்கப்பட்டடிருந்தமை பற்றி சகல செயற்படுத்துநர்களும் மேலும் குறிப்பிட்டனர்.
பாதிப்பைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் கையடக்க தொலைபேசி இணைப்புக்கான வாடிக்கையாளர் சலுகைகளை செயல்படுத்தப்படுகின்றது.
ஹட்ச்: எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு கட்டணமின்றி இலவசமாக 1 ஜிபி டேட்டா, 300 நிமிட ஒலி தொடர்பாடல் மற்றும் 300 குறுஞ்செய்தி வசதிகளுடன் முற்செலுத்தல் நிலுவை ரூபா 10.00 இற்கு குறைந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
டயலொக்: முற்செலுத்தல் பொதி தொடர்பாக, கணக்கு நிலுவை ரூபா 10.00 இலும் குறைவாக இருக்கும் போது, எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கட்டணமின்றி இலவசமாக 1 ஜிபி டேட்டா, 250 நிமிட ஒலி தொடர்பாடல் மற்றும் 300 குறுஞ்செய்தி வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் (பேசும் நேரம் மற்றும் டேட்டா ஆகிய இரண்டும் உள்ளடக்கப்படும்)
மொபிடெல்: இலவசமாக 1 ஜிபி டேட்டா, 300 நிமிட ஒலி தொடர்பாடல் மற்றும் 300 குறுஞ்செய்தி வசதிகள் முற்செலுத்தல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
பிற்செலுத்தல் வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரையில், அனர்த்த காலத்தில் டேட்டா அல்லது ஒலி தொடர்பாடல் சேவைகள் தொடர்பாக இணைப்புக்கள் துண்டிக்கப்படமாட்டாது.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மின் இணைப்புக்களின் மீள் இணைப்புச் செய்ய வேண்டிய உடனடித் தேவையை அவர்களும் உணர்ந்துள்ளதுடன் இவ்விடம் தொடர்பான பணிகளை துரிதப்படுத்துமாறு உரிய பொறுப்பாளர்களை கோரியுள்ளனர்.
Message of Condolences from International Telecommunication Union (ITU) on disaster...
04 12 2025 - 09:00 AM
புயலினால் பாதிக்கப்பட்ட...
28 11 2025 - 17:30 PM
கேபிள் தொலைக்காட்சி, செய்மதி...
13 11 2025 - 11:40 AM
ஒற்றை சாளர கருத்து (Single Window Concept)...
11 11 2025 - 15:30 PM