2026 ஆம் ஆண்டு சர்வதேச சூழல் தினத்தை முன்னிட்டு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவானது பின்ரும் கருப்பொருளின் கீழ் அறிவுப்பூர்வமான விசேட உரை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
“காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினை குறைப்பதற்காக நடவடிக்கை எடுப்போம்.”
இவ்வமர்வானது சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய புகழ் பெற்ற நிபுணரான கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் மற்றும் சூழல் விஞ்ஞான திணைக்களத்தின் பேராசிரியர் எரந்ததி லொக்குபிட்டிய அவர்களினால் நடாத்தப்பட்டது.
சுற்றுச் சூழல் நிலைத்தன்மையை நோக்கிய கூட்டு நடவடிக்கையின் அவசர தேவைக்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு, ஆணைக்குழுவின் காரியாலய உத்தியோகத்தர்களின் மற்றும் பங்குதாரர்களின் கலந்து கொள்ளலுடன் 2026 ஜுன் 05 ஆம் திகதி இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வானது வெற்றிகரமாக நடைப்பெற்றது.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள், அவைகளை குறைப்பதற்காக செயற்பாட்டு ரீதியான வழிமுறைகள் மற்றும் சூழல் பாதுகாப்பதில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வகிக்கக்கூடிய பங்களிப்பு பற்றிய பெறுமதிமிக்க அறிவினை இந்நிகழ்வில் கலந்து கொண்டோர் பெற்றுக் கொண்டனர்.
இம்முயற்சியின் ஊடாக சூழல் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், காலநிலை மாற்றங்களுக்கு எதிராக போராடுவதற்கும், உலகலாவிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது.
TRCSL பதிவு செய்யப்பட்ட IMEI இயங்கு...
06 01 2025 - 13:30 PM
தொலைத்தொடர்பு துறையில்...
30 12 2024 - 11:30 AM
பணி அறிவிப்பு (NoA)...
06 12 2024 - 15:00 PM
Examination for the Issuance of Amateur Radio Operator License...
15 10 2024 - 15:40 PM