இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு




கொள்கை, ஒழுங்குவிதி மற்றும் சேவைகள் தொடர்பில் எஸ்ஏரீஆர்சி செயற்குழுவின் கூட்டம்

16 09 2025 - 08:30 AM

கொள்கை, ஒழுங்குவிதி மற்றும் சேவைகள் தொடர்பில் எஸ்ஏரீஆர்சி செயற்குழுவின் கூட்டம்,

கொள்கை, ஒழுங்குவிதி மற்றும் சேவைகள் தொடர்பில் எஸ்ஏரீஆர்சி செயற்குழுவின் கூட்டம், 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி 2025, கொழும்பு, இலங்கை

தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் சம்மேளணத்தின் (SATRC) கொள்கை, ஒழுங்குவிதி மற்றும் சேவைகள் குறித்த செயற்குழுவின் கூட்டம், தெற்காசிய நாடுகளின் ஒழுங்குபடுத்தல் அதிகாரிகளின் உயர் மட்ட பிரதிநிதிகள், ஏபிடி (APT) இன் இணை உறுப்பினர்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களின் பங்கேற்புடன், 2025 செப்டம்பர் 23 முதல் 25 வரை கொழும்பில் உள்ள ஹில்டன் கொழும்பு ரெசிடென்ஸி ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை ஆசிய-பசுபிக் தொலைத்தொடர்பு அமைப்பு (APT) ஏற்பாடு செய்து, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணைக்குழு (TRCSL) தலைமைதாங்கி நடத்தியது. SATRC செயல் திட்ட கட்டம் IX இன் கீழ் கூட்டப்பட்ட இந்த கூட்டம், நேரடி மற்றும் தொலைதூர (ரிமோட்) பங்கேற்புடன் நடாத்தப்பட்ட இரு பாணி நிகழ்வாக நடத்தப்பட்டது.

எஸ்ஏரீஆர்சி  (SATRC) கொள்கை, ஒழுங்குவிதி மற்றும் சேவைகள் பணிக்குழு (WG PRS), உறுப்பு நாடுகளிடையே பொதுவான கொள்கை, ஒழுங்குவிதி மற்றும் சேவை தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்கிறது மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் அதிகரித்து வரும் சவால்கள் குறித்த அறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்குகிறது.

பணிச் செயன்முறைகள் :
பின்வரும் பணிச் செயன்முறையை எஸ்ஏரீஆர்சி  டள்ளியுஜீ பிஆர்எஸ் (SATRC WG PRS) பராமரிக்கின்றது:

•     பணிக்குழு ஒழுங்குமுறை அதிகாரிகளில் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரினால் தலைமை தாங்கப்படுகின்றது.
•    ஒவ்வொரு பணிக்குழுவிலும் ஒழுங்குமுறை அதிகாரிகளில்குறைந்தது ஒரு நிபுணர் இருக்க வேண்டும்.
•    ஒழுங்குமுறை அதிகாரிகள் தங்கள் நாட்டின் கைத்தொழிற் துறையில் தொடர்புடைய பணிகளில் நிபுணர்களை பரிந்துரைத்து ஊக்குவிக்கலாம்.
•    SATRC பிராந்தியத்தின் தேவைக்கு பொருத்தமான பல பணிகளில் பணிக்குழு செயல்படுகிறது.
•    ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் தொழில்துறையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஒழுங்குமுறை அதிகாரிகள், பணிக்குழு நிபுணர்கள் மற்றும்            SATRC ஆலோசகர் ஆகியோரால் பணி தொடர்பான விடயங்கள் முன்மொழியப்படுகின்றன.
•    பணிக்குழு ஒரு வருடத்திற்கு ஒரு நேரடி கூட்டத்தை ஏற்பாடு செய்கிறது. நேரடி கூட்டங்களுக்கு மேலதிகமாக, மின்னஞ்சல் பிரதிபலிப்பான் மூலம்                     பணிக்குழு நேரலை அமர்வுகளை நடத்துகிறது.
•    பணிக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு SATRC உறுப்பினர்களுக்கு உதவித்தொகையொன்று வழங்கப்படுகிறது.
• ஒவ்வொரு பணி விடயத்தின் பணியின் நோக்கங்களையும் பணிக்குழு தீர்மானிக்கிறது
• ஒவ்வொரு பணி தொடர்பான வெளியீடு SATRC அறிக்கை அல்லது வழிகாட்டுதல் அல்லது பணிக்குழுவால் தீர்மானிக்கப்பட்ட கருத்து. பணிக்குழுவின்             அனைத்து வெளியீடுகளும் SATRC இன் அடுத்த நேரடிக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

தலைமைத்துவம்:

•    தலைவர்: திரு. கவார் சித்தீக் கொஹார், பாகிஸ்தான் தொலதை்தொடர்புகள் அதிகாரசபை (PTA)
•    பிரதித் தலைவர்கள்: கலாநிதி. சம்சுசோகா, பங்களதேஸ் தொலைத்தொடர்புள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு(BTRC) மற்றும் திருமதி ரோஜா கிரான் பசுகலா, நேபாளம் தொலைத்தொடர்புகள் அதிகாரசபை (NTA)
•    டப்ளியுஜீ நிபுனர்கள்: to download the complete list of the Experts டப்ளியுஜீ நிபுனர்களின் முழுமையான பட்டியலை பதிவிறக்கம் செய்வதற்கு இங்கே க்ளிக் செய்யவும்  (Click Here).

ஒப்படைக்கப்பட்ட பணி விடயங்கள்:

SATRC செயல் திட்டம் கட்டம் IX (2024-2025) அமுல்படுத்தலின் போது WG PRS இன் பணி விடயங்கள் பின்வருமாறு:

•    பணி விடயம் 1: நிலையான மற்றும் மொபைல் புரோட்பேண்டிங்கான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஸ்மார்ட் தீர்வுகள் தொடர்பான ஒழுங்குமுறை சவால்கள் பற்றிய ஆய்வு.
•    பணி விடயம் 2: டிஜிட்டல் இணைப்புக்கான உலகளாவிய சேவை கடமை நிதியின் பயன்பாட்டை மேம்படுத்துதல்
•    பணி விடயம் 3: நிலையான அபிவிருத்திக்கான த.தொ.தொ. (ICT) மின்-கழிவு முகாமை விதிமுறைகளை மேம்படுத்தல். 
•    பணி விடயம் 4: நுகர்வோர் தகவல் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை கவனத்திற் கொண்டு, நேரலை மோசடிகள் மற்றும் டிஜிட்டல் நிதி மோசடிகளின் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்த ஆய்வு.
•    பணி விடயம் 5: எஸ்ஏரீஆர்சி  (SATRC)  நாடுகளில் கட்டணக் கொள்கைகளில் ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ந்து வரும் சேவைகளின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்தல்.
•    பணி விடயம் 6: ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் சமூகங்கள்: IoT, பிக் டேட்டா மற்றும் ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் எஸ்ஏரீஆர்சி  (SATRC)   நாடுகளின் அனுபவம் மற்றும் விடய ஆய்வுகள்.

1997 ஆம் ஆண்டு ஆசிய-பசுபிக் தொலைத்தொடர்பு (APT) மற்றும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) பிராந்திய அலுவலகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக நிறுவப்பட்ட தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு (SATRC), தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஒழுங்குமுறையில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து தெற்காசிய ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரிகளுக்கு பரஸ்பர ஆர்வத்துடன் கலந்துரையாடல் மற்றும் ஒருங்கிணைப்புக்கான தளமாக செயல்படுகிறது. இந்த சம்மேளணம் பிராந்திய ஒத்துழைப்பை அபிவிருத்திசெய்வதோடு, கருத்தரங்குகள், கூட்டங்கள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் செயலமர்வுகள் மூலம் அறிவுப் பகிர்வை எளிதாக்குகிறது. எஸ்ஏரீஆர்சி  (SATRC)   செயல்பாடுகளில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், நேபாளம்,

கிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் ஒழுங்குமுறை அதிகாரிகளின் உயர் மட்ட பிரதிநிதிகளின் ஆர்வத்துடனான பங்கேற்பு இடம்பெறுகின்றது. பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பகிரப்பட்ட கருதப்பாடுகள் மற்றும் விடயங்களை நிவர்த்தி செய்ய இச் சம்மேளணம் தொடர்ந்து கூடி வருகின்றறது.

நிகழ்வு பற்றிய மேலதிக விவரங்கள் இங்கே கிடைக்கின்றன: https://apt.int/apt/SATRC-WGPRS
 

 

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

பொது ஏலம்...

11 08 2025 - 17:40 PM