இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2024 ஐ வெற்றிகரமாக ஆரம்பித்து, தொலைத்தொடர்புத் துறையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து தொலைத்தொடர்புகளில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியை ஊக்குவிக்கும் முக்கியமான தளமாக செயல்பட்டு வருகிறது.
இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தின் பணிப்பாணையுடன் இணைந்த இந்த நிகழ்ச்சித்திட்டம், முக்கிய சவால்களுக்கு முகங்கொடுத்து தொலைத்தொடர்புத் துறைக்கான நடைமுறைத் தீர்வுகளை வழங்கும் கல்வி மற்றும் கைத்தொழில் ஆராய்ச்சியை முன்னெடுப்பதற்கு TRCSL இன் தொடர்ச்சியான ஆதரவை எடுத்துக்காட்டுகிறது.
இந்த ஆண்டின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம் மற்றும் ருகுணு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சி பங்களிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் அரச பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சிக் குழு உறுப்பினர்கள், TRCSL அதிகாரிகள், கைத்தொழில் நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு ஆராய்ச்சியின் ஆரம்ப விளக்கக்காட்சியைத் தொடர்ந்து ஆராய்ச்சி சார்ந்த கேள்வி பதில் அமர்வுகள், ஆராய்ச்சியாளர்கள், இளங்கலை பட்டதாரிகள் மற்றும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மத்தியில் அறிவு பரிமாற்றம் மற்றும் ஆக்கபூர்வமான உரையாடல்கள் என்பன இடம்பெற்றன.
தொழிற்துறை நிபுணர்களின் ஒத்துழைப்புடன் செயல்முறை பயன்பாடுகளுடன் கல்வி ஆராய்ச்சியை இணைக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம், இலங்கையின் தொலைத்தொடர்புத் துறையில் நிலையான முன்னேற்றத்தை இந்த திட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.
TRCSL Shines as Runner-Up at State Services Challenge Trophy 2024 Softball Cricket...
15 01 2025 - 14:00 PM
Notice to Vendors of Telecommunication Equipment (Apparatus)...
09 01 2025 - 09:20 AM
TRCSL பதிவு செய்யப்பட்ட IMEI இயங்கு...
06 01 2025 - 13:30 PM
தொலைத்தொடர்பு துறையில்...
30 12 2024 - 11:30 AM