இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு




ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2024 இன் 2 ஆவது முன்னேற்ற முன்வைப்பை இலங்கை தொலைத்த

29 10 2025 - 09:30 AM

தொலைத்தொடர்புத் துறையில் புத்தாக்கு மற்றும் முன்னேற்ற ஆராய்ச்சியை உறுதிப்படுத்தும் அதன் அர்ப்பணிப்புக்களை  மீள உறுதிப்படுத்தி, 2025 ஒற்றோபர் 16 ஆம் திகதி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2024 இன் 2 ஆவது முன்னேற்ற முன்வைப்பை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெற்றிகரமாக நடாத்தியது.

(திருத்தப்பட்டவாறான ) 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்திற்கு இணங்க, தொலைத்தொடர்புகளின் எதிர்காலம் தொடர்பாக பிரயோக ரீதியான தீர்வுகளை அபிவிருத்தி செய்வதுடன் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சவால்களுக்கு தீர்வு வழங்குவதற்கும் ஒத்துழைப்பு ஆய்வினை மேம்படுத்தும் கல்வி மற்றும் கைத்தொழில் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய தளமாக ஆராய்சி மற்றும் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் செயற்படுகின்றது.

மொரட்டுவைப் பல்கலைக்கழகம், களணி பல்லைக்கழகம் மற்றும் ருகுணு பல்கலைக்கழகங்களின் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்சிகளை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியதுடன் பின்வரும் புத்தாக்கு பரப்புக்களை உள்ளடக்குகின்றன:


•    இரைசலில் பிரத்தியேகப்படுத்தப்பட்ட நுட்பரீதியான மேம்படுத்தல் தொடர்பாக இடஅவகாச ஒலிப் பதிவு மற்றும் மீள் உற்பத்தி
•    சுதந்திரமான வாழ்வாதார ஒத்துழைப்பு தொடர்பாக IoT- அடிப்படையிலான தூக்க கண்காணிப்பு கருவிகள்.
•    LTE-TDD வலையமைப்புக்களில் சூழல்சார் குறைப்பு இன்டபிரசென்சைக் குறைப்பதற்கு இயந்திர கற்றல் இயலுமை கொண்ட வலையமைப்பை                    மேம்படுத்தல்
•    கண்பார்வையற்ற பாடசாலை மாணவர்களுக்கான கல்வி ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் சுந்திரமாக செயற்படுவதற்கும் புத்தாக்கு மென்பொருள் தீர்வுகள்.

ஒத்துழைப்பு தொடர்பாக ஆராய்ச்சி முன்னேற்றம் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை ஊக்கப்படுத்துவதுடன், ஆய்வாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆராய்ச்சி ஆராய்ச்சி அர்ப்பணிப்பு அங்கத்தவர்கள் மற்றும் கைத்தொழில் பிரதிநிதிகள் ஆகியோர்களை இந்த அமர்வு ஒன்றாக ஒருங்கிணைத்தது. ஒவ்வொரு முன்வைப்புக்களின் பின்னர் குறுக்கீட்டு கேள்வி பதில் அமர்வுகள் கல்வியாளர்கள், கைத்தொழில் மற்றும் ஒழுங்குபடுத்தல் நிபுனர்கள் ஆகியோர்களுக்கிடையில் பெறுமதிமிக்க அறிவினை பகிர்ந்து கொள்வதற்கு வசதியளிப்புச் செய்தது.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் இலங்கையின் தொலைத்தொடர்புத் துறையின் நிலைபெறுதகு  வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யும் ஆராய்ச்சி நோக்கிய புத்தாக்கம் தொடர்பாக ஒத்துழைப்பையும் மேம்பாட்டையும் தொடர்கின்றது.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்