இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


திரு.அருண குகுலேகம  LLB (OUSL), AAL, ICASL (Intermediate Level), MIT(University of Kelaniya)

 

அருண குகுலேகம அவர்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் பட்டம் பெற்றவர். 2010 டிசம்பர் மாதம் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அதேவேளை, இலங்கை பட்டயக் கணக்காளர் கற்கை நிலையத்தில் இடைநிலை மட்ட தொழில்சார் தகைமையினையும் பெற்றுள்ளார். இதேவேளை, இவர் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (Institute Of Chartered Accountants Of Sri Lanka) இடைநிலை தொழில்முறைத் தகைமையையும் (Intermediate Level Professional qualification) பேணுகின்றார், அத்துடன் களனிப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் முதுமாணிப் பட்டத்தையும் (Master of Information Technology) பெற்றுள்ளார்.

2002 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வருமான உத்தியோகத்தராக பணியாற்றி வருகின்றார். வருவாய் அதிகாரியாக, தனிநபர், கூட்டாண்மை மற்றும் கார்ப்பரேட் அளவிலான வரி வெளிப்பாடு மற்றும் சட்டப் பிரிவு பணி அனுபவத்தையும் பெற்றுள்ளார். அதேவேளை, வரி நிர்வாக மற்றும் இயலுமை விருத்திசெய்தல் ஆகிய விடயங்களுடன் தொடர்புடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளையும் பெற்றுக்கொண்டதுடன். தற்போது, இவர் மேல்நிலை நிறுவனத் துறை பிரிவில் (Upper Corporate Sector Unit) பிரதி ஆணையாளர் பதவியை வகிக்கின்றார்.