| வங்கி : மக்கள் வங்கி | கிளைக் குறியீடு : 119 |
| ஸ்விஃப்ட் குறியீடு : PSBKLKLX | கணக்கு இலக்கம் :119-1001-4-3693169 |
| வங்கி குறியீடு : 7135 |
மேல்குறிப்பிட்ட முறை 04 ஐ நீங்கள் பயன்படுத்துவீர்களாயின், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் கணக்கிற்கு வைப்புத்தொகை/நிதியை மாற்றிய உடனே, வங்கி வைப்புச் சீட்டுத் துண்டின் பிரதியுடன், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்ட முன்மாதிரி விலைப்பட்டியல் (proforma invoice) /கடித நகல்/விளம்பர நகல் அல்லது பிற தொடர்புடைய ஆவணங்களை பின்வரும் தொலைநகல் எண்/வாட்ஸ்அப் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு கட்டாயமாக உட்படுத்த வேண்டும்.
மேலும், TRCSL குறிப்பு எண் / உரிம எண், அல்லது முன்மாதிரி விலைப்பட்டியல் (reference number) எண் வங்கி வைப்புச் சீட்டில் / குறிப்புப் புலத்தில் குறிப்பிடுவது இன்றியமையாததும் மற்றும் கட்டாயமானதும் ஆகும்.
தொலைநகல் எண் : 0112671679
வாட்ஸ்அப் எண் : 076 5051900
மின்னஞ்சல் முகவரி : Payments@trc.gov.lk
மேற்குறிப்பிட்ட எந்தவொரு முறையைப் பயன்படுத்தினாலும், TRCSL அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கோ, உரிமத்தைப் புதுப்பிப்பதற்கோ உங்கள் கட்டணத்தைச் செலுத்தியதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரமாக, TRCSL நிதிப் பிரிவிலிருந்து நீங்கள் ஓர் அதிகாரப்பூர்வ பற்றுச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேற்குறிப்பிட்ட வழிகாட்டல்களை நீங்கள் பின்பற்றத் தவறினால், ஏற்படக்கூடிய தாமதத்திற்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.
மேலதிக உதவிகளுக்கு, 0112671680 என்ற இலக்கத்தை அழைக்கவும்