
தெற்காசிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் அமைப்பு பேவையின் 27ஆவது கூட்டம் (SATRC-27), 2026 ஒக்டோபர் 20 முதல் 22 வரை இலங்கையில் கொழும்பில் நடைபெற்றது. ஆசிய - பசிபிக் தொலைத்தொடர்பு சமூகத்தினால் (APT) ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டமானது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் (TRCSL) நடாத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நேரடியாகவும் இணையவழியாகவும் பங்கேற்கும் வகையில், நேரடி மற்றும் இணையவழிப் பங்கேற்பை உள்ளடக்கிய ஒரு நிகழ்ச்சியாக இது நடைபெற்றது.
SATRC-27 மாநாட்டிற்கு தெற்காசியப் பிராந்தியத்தின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் அதிகார சபைகளின் தலைமை அதிகாரிகள், சிரேஷ்ட உத்தயோகஸ்தர்கள், தொலைத்தொடர்புத் துறையின் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய பங்குதாரர்களும் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பத் துறைகள் தொடர்பான முக்கிய கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நிலைமைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், பிராந்திய ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும், அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், SATRC உறுப்பு நாடுகளுக்கு பொதுவாக முக்கியத்துவம் பெற்ற பிரதான கொள்கை மற்றும் ஒழுங்குமுறைப் பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, SATRC-26 ஆவது கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட SATRC செயல்திட்டத்தின் X ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்களும் மீளாய்வு செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிதிட்டத்தில் ஒழுங்குமுறை தொடர்பான வட்டமேசைக் கலந்துரையாடல், ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கும், கைத்தொழில் துறையினருக்கும் இடையிலான கலந்துரையாடல், கைத்தொழில் அமர்வு மற்றும் ஒழுங்குமுறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான பல அமர்வுகளும் இதனுள் உள்ளடங்கின.
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு, பிராந்திய ஒத்துழைப்புக்குத் தேவையான முக்கிய ஒழுங்குமுறை விடயங்கள் தொடர்பில் தமது கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதற்கான சிறந்த தளமாக ஒழுங்குமுறை அதிகாரிகளின் வட்டமேசைக் கலந்துரையாடல் அமைந்தது. அத்துடன், ஏனைய அமர்வுகளின் மூலம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மாறிவரும் ஒழுங்குமுறைக் கொள்கைகள், கைத்தொழில் துறையின் வளர்ச்சிகள் மற்றும் பிராந்தியம் முழுவதும் தொடர்பிணைப்பை வலுப்படுத்துவதற்கும் மற்றும் டிஜிட்டல் உருமாற்றத்தை மேம்படுத்துவதற்குரிய வாய்ப்புகள் குறித்துக் கலந்துரையாடவும் சந்தர்ப்பம் கிட்டியது.
இலங்கை, தெற்காசிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் அமைப்பு பேரவையின் (SATRC) ஆரம்பகால உறுப்பு நாடுகளில் ஒன்றாகும். அப்பேரவை 1997ஆம் ஆண்டு ஆசிய - பசுபிக் தொலைத்தொடர்பு சமூகம் (APT) மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய அலுவலகங்களின் கூட்டு முயற்சியால் நிறுவப்பட்டது. APT இன் மேற்பார்வையின் கீழ் செயல்படும் SATRC, இணை உறுப்பினர்களின் செயற்பாட்டுமிக்க பங்களிப்புடன், தெற்காசியாவின் ஒன்பது உறுப்பு நாடுகளின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) ஒழுங்குபடுத்தும் அதிகார சபைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய பிராந்திய தளமாகச் செயல்படுகின்றது. SATRC ஏற்பாடு செய்யும் கூட்டங்கள், செயற்குழுக்கள், பயிற்சிப் பட்டறைகள், பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஏனைய கூட்டு நடவடிக்கைகள் மூலம் ஒழுங்குமுறை அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படுகின்றன. இன்னும், பிராந்திய நாடுகள் பொதுவாக எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கும், தொலைத்தொடர்பு மற்றும் தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்கும் SATRC முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைத் துறையில் சுமார் மூன்று தசாப்த காலங்களாக தொடரும் பிராந்திய ஒத்துழைப்பின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், முதலாவது SATRC கூட்டம் 1997ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்றது. இலங்கை இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு SATRC இன் தலைமைப் பொறுப்பை வகித்ததுடன், 2026 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் (TRCSL), SATRC இன் பல செயற்குழுக் கூட்டங்களையும் ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளதோடு, இதன் மூலம் பேரவையின் செயற்பாடுகளையும் மற்றும் நோக்கங்களையும் நிறைவேற்றுவதில் தொடர்ந்தும் கொண்டுள்ள அர்ப்பணிப்பானது தெளிவாகப் இதன் மூலம் புலப்படுகின்றது.
SATRC-27 கூட்டம் கொழும்பில் நடைபெற்றமையானது, பிராந்திய தொலைத்தொடர்பு ஒத்துழைப்புடன் இலங்கை கொண்டுள்ள நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்திய ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. அத்துடன், அனைவரையும் உள்ளடக்கிய, சிறந்த தொடர்பிணைப்பைக் கொண்ட மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் வலுப்படுத்தப்பட்ட தெற்காசியப் பிராந்தியத்தை உருவாக்குவதற்கும் மற்றும் அதன் எதிர்கால முன்னேற்றத்திற்கு இலங்கை காட்டுகின்ற தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இக்கூட்டம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
Induction training program for newly appointed Assistant Directors of TRCSL...
02 05 2024 - 13:00 PM
Verification of Various Payments made online to TRCSL...
20 03 2024 - 11:30 AM
Competition Regulation on Telecommunications...
02 02 2024 - 04:00 AM
Modifications of Condition of Telecommunications System Licenses...
17 01 2024 - 10:30 AM