இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) அலைக்கற்றை முகாமைத்துவப் பிரிவு சாதனங்களை சாதன அனுமதிக்கான சாதனங்கள் அனுமதி முறைமையை (Equipment Clearance System - ECS) இப்போது அணுக முடியும் என்பதை அனைத்து விற்பனையாளர் உரிமாதாரர்களுக்கும், தனிநபர் பயனர்களுக்கும் மற்றும் நிறுவனப் பயனர்களுக்கும் அறியத் தருகிறது.
பொருத்தமானவர்கள்
பின்வரும் சேவைகள் சாதனங்கள் அனுமதி முறைமை (ECS) மூலமாகப் கிடைப்படுகின்றன:
சாதனங்கள் அனுமதி முறைமை (ECS) அனுமதி விற்பனையாளர் உரிமாதாரர்கள், தனிநபர் பயனர்கள் மற்றும் நிறுவனப் பயனர்களுக்குக் கிடைக்கிறது. அதற்கமைய, பதிவுசெய்யப்பட்ட விற்பனையாளர் உரிமாதாரர்கள், தனிநபர் பயனர்கள் மற்றும் நிறுவனப் பயனர்கள் சாதனங்கள் அனுமதி முறைமை (ECS) மூலமாகப் பெறக்கூடிய பொருத்தமான சேவைகளுக்கான கோரிக்கைகளை அணுகிச் சமர்ப்பிக்க முடியும்.
இவ்முறைமையானது, வானொலி மற்றும் தொலைத்தொடர்பு முனைய உபகரணங்கள் (RTTE) மாதிரி ஒப்புதல் விதிகள் 2020 தொடர்பான 2196/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிக்கு அமைவாக, மாதிரி ஒப்புதல் செயல்முறைகளின் முகாமைத்துவத்தை எளிதாக்குகிறது.
பதிவுசெய்யப்பட்ட விற்பனையாளர்கள், தங்களது பதிவு விபரங்கள் இறுதி செய்ததும், மின்னஞ்சல் (email) மூலம் தங்களின் சாதனங்கள் அனுமதி முறைமை (ECS) உள்நுழைவுக்கான தகுதிச் சான்றுகளை பெறுவார்கள்.
தனிநபர் மற்றும் நிறுவனப் பயனர்கள் செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி, சாதனங்கள் அனுமதி முறைமை (ECS) முறைமையின் மூலம் நேரடியாகவே தங்களைப் பதிவுசெய்து கணக்குகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.
விற்பனையாளர்களுக்கான முக்கிய குறிப்புகள்
தொழில்நுட்ப உதவி
உள்நுழைவதில் சிக்கல்களை எதிர்கொண்டாலோ அல்லது இணைப்பதில் சிரமங்களைச் சந்தித்தாலோ, தயவுசெய்து ECS உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளவும் :
முறை 1: சாதனங்கள் அனுமதி முறைமை (ECS) தொடர்பான சந்தேகங்கள் அல்லது வினவல்களுக்கு, ecshelpdesk@trc.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
முறை 2: https://forms.office.com/r/4ijtGYpQ4n. எனும் இணைப்பில் உள்ள உதவிப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும். படிவம் சமர்ப்பிக்கப்பட்டதும், உங்கள் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்படும். தேவையான ஆவணங்களை இணைத்து அதற்குப் பதிலளிக்க முடியும்.
சாதனங்கள் அனுமதி முறைமை (ECS) இல் விற்பனையாளர்கள், தனிநபர் பயனர்கள் மற்றும் நிறுவனப் பயனர்களை இணைத்து சாதன அனுமதிக்கான செயல்முறையை எளிதாக்கும் எமது முயற்சிகளுக்கு நீங்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
சாதனங்கள் அனுமதி முறைமை (ECS) உள்ள சிக்கல்கள் குறித்து புகாரளித்தல்
பயிற்சி கையேடு – விற்பனையாளர்கள்
பயிற்சி கையேடு – தனிநபர் பயனர்கள்
1. படிமுறை 1
2. படிமுறை 2
3. படிமுறை 3
4. படிமுறை 4
5. படிமுறை 5