இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு




இலங்கைப் பாடசாலைகளின் இணைய இணைப்பை ஆய்வு செய்ய GIGA ஆராய்ச்சிக் குழு TRCSL-க்கு வருகை.

14 10 2026 - 12:30 PM

GIGA ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்து, இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுடன் (TRCSL) கலந்துரையாடலில் ஈடுபட்டது. இலங்கையின் பாடசாலைகளில் நிலவும் இணைய இணைப்பின் தற்போதைய நிலைமையைப் பற்றிய தெளிவைப் பெற்றுக்கொள்வதற்காக, அக்குழுவினர் மேற்கொண்டு வரும் ஆய்வின் ஒரு பகுதியாக இவ்விஜயம் அமைந்தது.

இலங்கையின் பாடசாலைகளில் இணைய இணைப்பு தொடர்பான முழுமையான நிலைமை குறித்து விரிவான தெளிவைப் பெற்றுக்கொள்வதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது. இதன் கீழ், தற்போது நிலவும் தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு வசதிகள், இணைய இணைப்பை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் தீர்வுகள், நடைமுறையில் உள்ள நிகழ்ச்சித் திட்டங்கள், அத்துடன் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கான இணைய அணுகலை விரிவுபடுத்துவதற்கும், அதன் தரத்தை மேம்படுத்துவதற்கும் தொடர்புடைய எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

கலந்துரையாடலின்போது, பாடசாலைகளுக்கு இணைய இணைப்பை வழங்குவதில் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம், அதற்காக தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், அத்துடன் நம்பகமானதும் நிலையானதுமான இணைய இணைப்பை வழங்குவதில் தோன்றுகின்ற சவால்கள் தொடர்பாக GIGA ஆய்வுக் குழுவினால், TRCSL மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களிடம் தகவல்களையும் கருத்துகளையும் கேட்டறிந்தனர். இதன்போது, இணைய இணைப்பு வசதிகளில் நிலவும் குறைபாடுகள் காரணமாக டிஜிட்டல் கற்றல் வாய்ப்புகளைப் பெறுவதில் வரையறைகளை எதிர்கொள்கின்ற கிராமப்புறப் பகுதிகள் மற்றும் போதிய சேவை வசதிகளால் உள்ளடக்கப்படாத பகுதிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், தேசிய மூலோபாயங்கள், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாடசாலை இணைய இணைப்புத் நிகழ்ச்சித்திட்டங்கள், அவற்றைச் செயல்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய துறைகள் தொடர்பான பொருத்தமான இரகசியமற்ற தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இக் கலந்துரையாடல் ஒரு வாய்ப்பளித்தது. பாடசாலைகள் மற்றும் சமூக மட்டங்களில் இணைய இணைப்பு வழங்கப்படும் முறைகள் மற்றும் அவற்றின் நன்மைகள் அனுபவிக்கப்படும் விதம் குறித்து அறிந்துகொள்வதுடன், தற்போதுள்ள குறைபாடுகள், தேவைகள் மற்றும் மேலும் மேம்படுத்தக்கூடிய துறைகளை அடையாளம் காண்பதும் இந்தக் கலந்துரையாடலில் முக்கிய நோக்கங்களாக அமைந்தன.

இலங்கையில் பாடசாலைகளுக்கான இணைய இணைப்பை விரிவுபடுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் GIGA ஆய்வுக் குழுவினரால் மேற்கொள்ளப்படும் சுயாதீன மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இந்த விஜயம் இடம்பெற்றது. இந்த ஆய்வின் மூலம் கிடைக்கும் கண்டறிதல்களைக் கொண்டு அறிவுப் பரிமாற்றத்திற்கு ஆதரவளித்தல், தொடர்ச்சியாக மேம்படுத்தக்கூடிய துறைகளை அடையாளம் காணுதல் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்கள், ஒழுங்குமுறை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட ஏனைய பங்குதாரர்களுக்கிடையில் எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம், குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் போதிய சேவை வசதிகள் கிடைக்காத பகுதிகளில் வாழும் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் கற்றல் வாய்ப்புகளைப் பெறுவதில் நியாயமானதும் மற்றும் சமமானதுமான அணுகலை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்னெடுப்புகளுக்கு இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகிறது.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்