மக்களுடைய வாழ்க்கை நிலையை உயர்த்துதல் மற்றும் டிஜிட்டல் இடைவெளியை குறைப்பதற்காக இணைய மற்றும் ஏனைய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் முக்கியத்துவத்தை பற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்கும் நோக்கில் உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினமானது (WTISD) ஒவ்வொரு வருடமும் 17 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. 2026 ஆண்டு இத்தினமானது, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) ஸ்தாபிப்பதற்கு அடிப்படையாக அமைந்த முதலாவது சர்வதேச தொலைத்தொடர்பு மாநாடு செயற்பட்டு 161 வருடங்களை நிறைவு செய்வதை குறிக்கின்றது.
2026 உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தை கொண்டாடும் முகமாக, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகள் “டிஜிட்டல் தொடர்புகளினால் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட வலையமைப்பு உலகின் ஸ்தீரத்தன்மையை வலுப்படுத்தல்” என்ற கருப்பொருளை மேம்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்பட்டது. இக்கருப்பொருளுக்கு அமைவாக இதனை பொது மக்களுக்கு தெரிவிக்கும் நோக்கில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், கௌரவ பிரதமர் அவர்கள், கௌரவ டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் கௌரவ தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் அவர்களினால் வெளியிடப்பட்ட 2026 உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தின முக்கிய செய்திகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டது. இன்னும், “டிஜிட்டல் தொடர்புகளினால் இணைக்கப்பட்ட வலையமைப்பு உலகின் ஸ்தீரத்தன்மையை வலுப்படுத்தல்” என்ற கருப்பொருளிற்கு அமைவாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் காரியாலய உத்தியோகத்தர்களுடைய கலந்து கொள்ளலுடன் அறிவுறுத்தல் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இடம்பெற்றுது. இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் துறையின் பேராசிரியர் மற்றும் இலங்கை கணிணி அவசரகால தயார் குழுவின் உத்தியோகத்தரினால் நடாத்தப்பட்ட தகவல் அமர்வும் உள்ளடக்கப்பட்டதுடன், இதன் போது கருப்பொருளிற்குரிய துறை மற்றும் தற்போதைய டிஜிட்டல் சூழலினுள் அதற்குரிய முக்கியத்துவம் பற்றிய அவதானமும் உட்படுத்தப்பட்டது.
WTISD 2026 Special Messages and Newspaper Articles
ITU Secretary General's WTISD 2026 Message
International Environment Day 2026 – Guest Lecture at...
11 06 2026 - 15:01 PM
உலக தொலைத்தொடர்புமற்றும் தகவல்...
19 05 2026 - 13:46 PM
கையடக்க தொலைப்பேசி...
06 05 2026 - 09:47 AM
அவரச தொடர்பாடல் திறன்களை...
08 04 2026 - 10:10 AM