இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு




இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அவர்கள் 2026 உலக தகவல் சமூக

21 07 2026 - 13:47 PM

பணிப்பாளர் நாயகம் அவர்கள் இலங்கை தூதுக்குழுவின் உறுப்பினராக இந்த மாநாட்டிற்கு கலந்து கொண்டதோடு, அதிமேதகு ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த தலைமை ஆலோசகராகிய கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய அவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டார். டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரித்தல், சர்வதேச ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தல் மற்றும் அனைத்து தரப்பினருடைய கலந்து கொள்ளலுடன் நிலையான தகவல்கள் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பங்களை மேம்படுத்துவதற்காக இலங்கை காட்டுகின்ற தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த தூதுக்குழுவினால் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இவ்வமர்வில் பணிப்பாளர் நாயகம் திரு.எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் (ஓய்வுபெற்ற) அவர்கள் ஒழுங்குமுறைபடுத்துனர்களுடைய வட்டமேசை கலந்துரையாடலுக்கு கலந்து கொண்டதுடன், தற்போது காணப்படுகின்ற ஒழுங்குமுறை சவால்கள், வேகமாக வளர்ந்துவரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உலகலாவிய டிஜிட்டல் சூழல் முறைமையை மேலும் வலுப்படுத்துவதற்கு தேவையான கொள்கை கட்டமைப்பு பற்றிய உயர் மட்ட கலந்துரையாடல்களுக்கு செயல்திறனான பங்களிப்பு வழங்கப்பட்டது. இந்த தலையீடுகளின் மூலம் ஒழுங்குமுறைபடுத்துனர்களுக்கான உலகளாவிய கருத்தரங்கு வழிகாட்டல்களில் (GSR-26) குறிப்பிட்டுள்ள அத்தியாவசியமான ஏழு நிர்வாக கோட்பாடுகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள செயற்பாட்டு வழிகாட்டி தொகுப்புடன் (ACT) முழுமையாக இணங்கியது. 2030 தேசிய டிஜிட்டல் பொருளாதார மூலோபாய வழிகளின் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை துறையை வலுப்படுத்தல், டிஜிட்டல் இணைப்பை விரிவுபடுத்தல் மற்றும் தாக்குபிடிக்க கூடிய அனைத்து தரப்பினர் உட்பட்ட டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக இலங்கையில் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும் முயற்சிகள் குறித்தும் அவரது கருத்து தெரிவிப்பில் தெளிவுபடுத்தினார்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்